அவர் முகத்தில் முழிக்கவே மாட்டேன்.! அசிங்கமாக திட்டிய வடிவேலு…பாவா லட்சுமணன் பகிர்.!

Vadivelu: நடிகர் வடிவேலு ஆபிஸ் சென்றால் இங்கெல்லாம் வராதீங்க என்று அசிங்கமாக திட்டுவார் என நடிகர் பாவா லட்சுமணன் வருத்தத்துடன் கூறிஉள்ளார்.
சினிமா என்பது போட்டிகள் பொறாமைகள் நிறைத்த உலகம், அதற்கு எடுத்துக்காட்டாக பிரபலங்கள் பலர் தங்களுக்கு நடந்த சம்பவத்தை தனியார் சேனல்களுக்கு பேட்டி அளிப்பதுவழக்கம். அந்த வகையில், வடிவேலு பற்றி அவருடன் நடித்த சக நடிகர்கள் அவரை பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
அவ்வாறு நடிகர் பாவா லட்சுமணன் சில அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்து கொண்டார். நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் திரையில் வடிவேலுவுடன் நடித்த சில காமெடி கட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘மாயி’ படத்தில் அவர் பேசிய”வா மா மின்னல்” என்ற டயலாக் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
பாவா லட்சுமணன் அண்மையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதாவது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கால் விரல் அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
உடல் நலம் தெரிய நிலையில் தனியார் ஊடகதிற்கு பேட்டி அளித்து வந்தார். தான் கடந்த வந்த பாதைகள் குறித்து பேசியுள்ளார், அப்பொழுது நடிகர் வடிவேலு குறித்தும் பேசினார். அதாவது தொகுப்பாளர், பாவா லட்சுமணனிடம் திரையுலகில் யாரை இனிமேல் பார்க்க கூடாது என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பாவா லட்சுமணன் உடனே, “வைகை புயல் என்றார், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் எங்களை யாரையுமே கூப்பிடவில்லை, அது கூட பரவாயில்லை. இதை பற்றி வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லிருப்பார், பழைய ஆட்கள் யாரையும் கூப்பிடல, கட் பண்ணிட்டேன் புது ஆள் போட்ருக்கேன் என்று கூறிஉள்ளார். அப்போதெல்லாம் நாங்க ஏதாவது சொன்னா கேட்பாரு, இப்போ அந்த புதிய ஆட்கள் எதுத்து பேசுறாங்க, நாங்கலாம் அவுங்க வாங்குற சம்பளம் வாங்கவே இல்லை.
அவங்கெல்லாம் 20, 25 ஆயிரம் வாங்கிருக்காங்க. நாங்க இதுவரை வெறும் 5 ஆயிரம் ரூபாய் தான் வங்கியிருக்கோம் என்றும், அவரது ஆபிஸ் சென்றால் இங்கெல்லாம் வராதீங்க என்று அசிங்கமாக திட்டுவார். என்னை நாய் சேகர் படத்தில் கூப்பிடுவதாக சொன்னார் ஆனால் கூப்பிடவே இல்லை, நானும் அப்படியே விட்டுவிட்டேன் என்று வருத்தத்துடன் கூறினார் பாவா லட்சுமணன்.