லண்டனில் வைகைப்புயல் வடிவேலு.! 10 வெளிநாட்டு நடிகைகளை களமிறக்கும் திட்டம் போல.!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு 10 வெளிநாட்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம். லண்டன் சென்றுள்ள வடிவேலு, சுராஜ் நடிகைகளை தேடி வருகின்றனராம்.
வைகை புயல் வடிவேலு. இந்த பெயர் திரையில் வந்தாலே திரையரங்கில் விசில் பறக்கும். இந்த பெயர் எப்போது வரும் திரையில் வடிவேலுவை எப்போது கொண்டாடலாம். சிரித்து மகிழலாம் என ஒரு திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தனது அடுத்த இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் வடிவேலு. வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க, சுராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் தாரிப்பளார் சுபாஷ்கரன் கிருஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வருடா வருடம் லண்டனில் விருந்து வைப்பது வழக்கம். அதில் அவருக்கு நெருக்கமானவர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும். அதன்படி, வடிவேலு, மற்றும் இயக்குனர் சுராஜிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
லண்டன் சென்றுள்ள வடிவேலு, சுராஜ் இன்னொரு வேலையும் செய்ய உள்ளனராம். அதாவது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு 10 வெளிநாட்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம். அதனால், அவர்களை அப்படியே அங்கு தேர்வு செய்து இங்கு கூட்டி வந்துவிடலாம் என இயக்குனர் சிராஜ், வடிவேலு நடிகைகளை தேடி வருகின்றனராம். ஒரே கல்லில் இரண்டு மங்கா அடிக்கும் வடிவேலு, சிராஜ்.