தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்துள்ள திரைப்படம் என்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில நாட்கள் நடைபெற்றது.
ஈ.சி.ஆர் ரோட்டில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் சிறப்பாக வந்திருப்பதால் அதனை வீடியோவாக சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி, அதற்கான அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் “தேசிய விருது வென்ற திரு. சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 5:30 மணிக்கு, வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற காட்சிகள் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் ” என வாடிவாசல் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…
வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று…
கர்நாடகா : தினம் தினம் வித்தியாசமாக சிலர் வழக்கு தொடர்ந்து நீதி மன்றத்தில் நிவாரணம் கோரி அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டு வரும்…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும்…
இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல…