வயிறு குலுங்க சிரிக்க வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு போங்க! ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published by
பால முருகன்

சந்தானம் நடிக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இது ஒரு சீரியசான படம் என யாரும் நினைத்துவிட வேண்டாம் – இயக்குனர் ராம்..!

இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே சொல்லலாம். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இன்று (பிப்ரவரி 2) உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் ” வேடிக்கையான சிரிப்புடன் கூடிய பீரியட் காமெடி நாடகம் முதல் பாதி, அதைத் தொடர்ந்து மிக நல்ல இரண்டாம் பாதி
நேர்மறைகள்: நகைச்சுவை, (சந்தானம்) லொல்லி சபா டீம், பின்னணி இசை, திரைக்கதை & இயக்கம் . (டிடி ரிட்டர்ன்ஸ்) பிறகு சந்தானத்திற்கு ஒரு நல்ல திரைப்படம். ” என கூறியுள்ளார்.

படம் பார்த்த மற்றோருவர் ” மற்றொருவர் “டேய் நீ அந்த ராமசாமிதானடா.. இல்லடா வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற வடக்குப்பட்டி ராமசாமிடா.
சிரிச்சி, சிரிச்சி முடியல(அதுல ஒரு 15 நிமிஷம் காமெடி காட்சிகள் இருக்கிறது) கண்டிப்பா பாருங்க எல்லாத்தையும் மறந்து சிரிச்சு சிரிச்சு சந்தோசமா வெளியில வருவீங்க” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” குடும்பத்துடன் போக குதூகலமாக வாங்க மொத்த டீமுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் படம் மாபெரும் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

14 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

14 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

14 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

15 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

15 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

15 hours ago