VadaChennai Advance bookings: அட்வான்ஸ் புக்கிங்கில் அதிர வைத்த ‘வடசென்னை’ ! ரீ -ரிலீசுக்கே இப்படியா?

VadaChennai

வடசென்னை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வடசென்னை 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

ரீ-ரிலீஸ் 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த வடசென்னை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்12-ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் சென்னை கமலா திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

அதிர வைக்கும் அட்வான்ஸ் புக்கிங் 

படம் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில்,  வடசென்னைக்கான முன்பதிவுகளின்  டிக்கெட்டுகள்  மட்டும்  10,000-க்கும் மேலான விற்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆன் பாபா படத்திற்கு தான் இப்படி டிக்கெட் விற்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வடசென்னை படத்திற்கு டிக்கெட் புக் ஆகி இருக்கிறது. ஒரு டிக்கெட்டின் விலை 49-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை 2 

வடசென்னை முதல் பாகம் 60 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக படத்தினுடைய இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரும் தற்போது தாங்கள் கமிட் ஆகியுள்ள காரணத்தால் வடசென்னை 2 படம் தொடங்காமல் இருக்கிறது. விரைவில் வடசென்னை 2 குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation