Categories: சினிமா

ஜூலை 28 தேதி தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ட்ரைலர் வெளியீடு! நடிகர் தனுஷ் அறிவிப்பு

Published by
Venu

மீண்டும் ‘வடசென்னை’ படத்தில்  தனுஷ்-வெற்றி மாறன் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டும்  பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அள்ளின.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை, மிக பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது. படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முதல் முறையாக சந்தோஷ் நாராயணன், வெற்றி மாறன் படத்துக்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.வடசென்னை படம் கடந்த 2 வருடங்களாக உருவாகி வருகிறது.

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது  தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ட்ரைலர் ஜூலை 28 தேதி வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில்   நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago