வடசென்னை 2 அவ்வளவுதான்! வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா ரவி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
கேங்ஸ்டர் கதை அம்சத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. முதல் பாகம் முடியும்போதே படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது. எனவே, இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இருந்தாலும் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் பிரமாண்டமாக எடுக்கவேண்டும் என்ற காரணத்தால் பொறுமையாக அதற்கு என்று தனி நேரம் ஒதுக்கி தான் எடுக்க முடியும். ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களில் பிசியாக இருப்பதாலே இன்னும் வடசென்னை 2 குறித்த திட்டமும் தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வடசென்னை 2 படம் ஆரம்பம் ஆக இன்னும் காலங்கள் ஆகும். அடுத்ததாக வாடிவாசல் இருக்கிறது அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதனை பார்க்கவேண்டும். வடசென்னை 2 அவ்வளவு தான் அவ்வளவு என்றால் அவ்வளவு தான்” என கூறியுள்ளார். வடசென்னை 2 இனிமேல் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதை சூசகமாக அவர் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025