வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

வடசென்னை 2 படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கும் என இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்துள்ளார்.

vetrimaaran

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை படமும் ஒன்று. படத்தின் முதல் பாகம் வெளியாக்க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் கேங்ஸ்டார் படங்களின் பட்டியலிலும் இணைந்தது. இருப்பினும், முழு படமாக வெளியாகவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

ஒரே படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் என படம் முடியும் போது தான் தெரியவந்தது. எனவே, வடசென்னை 2 எப்போது அன்புவின் எழுச்சியை நாங்கள் எப்போது பார்க்கலாம் என ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வெற்றிமாறனும் அது வரும்…இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பது போலவே பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் ரசிகர் ஒருவர் வடசென்னை 2 பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். வடசென்னை 2 அவ்வளவு தான்…அவ்வளவு தான் என்றால் வராது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். ஆனால், இப்போது சமீபகாலமாக கொடுக்கும் பேட்டிகளில் வடசென்னை 2 கண்டிப்பாக வரும் என தெரிவித்து வருகிறார்.

அப்படி தான், நேற்று தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் வடசென்னை 2 குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” வடசென்னை2-வை ஆரம்பித்தால் இந்த அளவுக்கு பரபரப்பு இருக்காது.படம் ஆரம்பிக்கவில்லை என்பதால் இந்த அளவுக்கு பரபரப்பு இருக்கிறது.  எல்லாரும் வடசென்னை 2 குறித்து இவ்வளவு ஆர்வமாக கேட்கிறார்கள்…கண்டிப்பாக வரும்..வரும் சீக்கிரமாக வேலையை ஆரம்பிப்போம்” எனவும் வெற்றிமாறன் தெரிவித்தார்.

வெற்றிமாறன் சொன்னதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட வெற்றிமாறன் இப்படி மாற்றி மாறி பேசி வருவதன் காரணமாக குழப்பத்தில் இருக்கிறார்கள். மேலும், வெற்றிமாறன் விடுதலை 2 வெற்றியை தொடர்ந்து வாடிவாசல் படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு வடசென்னை 2 வேலைகளை தொடங்குவார் என தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்