வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.! சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்…
நடிகர் தனுஷ் நானே வருவேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சம்யுக்த்தா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாகிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கான முதல் பாடலான வாவாத்தி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும், படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
#Vaathi / #SIR Movie going to hit the theaters on 17 Feb 2023. ♥️#VaathiOn17Feb / #SIROn17Feb@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios @adityamusic @AdityaTamil_ pic.twitter.com/69YOuvpEqs
— Sithara Entertainments (@SitharaEnts) November 17, 2022
ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி மாதங்கள் கடந்து தள்ளி சென்றுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.