பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வெங்கி அட்லூரி
தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது தமிழில், தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெங்கி அட்லூரி திருமணம்
வாத்தி திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் . இவர்களுடைய திருமணம் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனுஷும் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்
வெங்கியின் திருமணத்திற்கு, அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ரங் தே’ படத்தில் நடித்த நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு இயக்குனருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிதின் தனது மனைவி ஷாலினியுடன் தனியாக வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது தனிப்பட்ட ஊழியர்களுடன் திருமணத்திற்கு வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்துள்ளார். அதில் ”வாழ்த்துக்கள் வெங்கிய்ய் மற்றும் பூஜா! இந்த புதிய தொடக்கத்திற்காக கடவுள் உங்கள் இருவர் மீதும் அன்பு பொழியட்டும்” என புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…