சூப்பர் ஸ்டார் முதல் ஷாருக்கான் வரை.. 2023இல் இறங்கி அடிக்க காத்திருக்கும் ராக்ஸ்டார் அனிருத்.!
இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்கு இசையமைத்தாலே அந்த படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் பெரிதளவில் பேசப்பட்டுவிடும் என்பது போலவே மாறிவிட்டது. அந்த அளவிற்கு ஒரு படத்திற்கு தரமான பின்னணி இசையையும், சூப்பரான பாடல்களையும் கொடுத்து மக்களை சந்தோஷத்தில் வைத்து வருகிறார்.
குறிப்பாக கடைசியாக இவரது இசையில் வெளியான திருச்சிற்றம்பலம், டான், விக்ரம் ஆகிய படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணம். அந்த அளவிற்கு இந்த படங்களுக்கு எல்லாம் இதைவிட ஒரு நல்ல இசையை கொடுக்க முடியுமா என்கிற அளவிற்கு அருமையான இசையை கொடுத்திருப்பார்.
இந்நிலையில், அனிருத் தான் தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் படங்களுக்கு அனிருத் தான் இசை. அதன்படி இவருடைய இசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
அனிருத் இசையில் வெளியாகவுள்ள டாப் படங்கள்
1.ரஜினிகாந்தின் -ஜெயிலர்
2.உலகநாயகன் கமல்ஹாசனின் – இந்தியன் 2
3.தளபதி விஜயின் – தளபதி 67
4.அஜித்தின் – AK62
5.ஷாருக்கானின் – ஜவான்
6.ஜூனியர் என்டிஆரின் – NTR30
7.தனுஷின் – D50
இந்த படங்களை தவிர்த்து இன்னும் சில படங்களில் அனிருத்தை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படங்களை தொடர்ந்து அவர் அடுத்ததாக இசையமைக்கவுள்ள படங்களின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.