ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!
விடுதலை 2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, ‘விடுதலை’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘விடுதலை-2’ நேற்று முன் தினம் (டிச,20) வெளியானது.
முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முதலே கலவையான விமர்சனத்தை பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படங்களின் பாக்ஸ் ஆபிஸ் தொடர்பான செய்திகளை வெளியிடும் சாக்னிக் இணையத்தளம் வெளியிட்ட தகவலின் படி, இந்திய முழுவதும் முதல் நாளில் சுமார் 7.5 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 8 கோடி வசூல் செய்தது.
இதன் மூலம், வெளியான இரண்டு நாள்களில் இதுவரை 15.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்று விடுமுறை என்பதாலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாலும் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.