ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாட பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜெயிலர் படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாவதற்கு முன்பு 9-ஆம் தேதியே ஒரு வார ஆன்மீக பயணமாக திட்டமிட்டு ரஜினிகாந்த் இமயமலை சென்றார்.இந்த பயணத்தில் இருக்கும் நாட்களில் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முதற்கட்டமாக பத்ரிநாத், துவாரகா, ரிஷிகேஷ், பாபா குகை உள்ளிட்ட சில முக்கியமான இடங்களுக்கு சென்ற அவர் சுவாமி தயானந்த சரஸ்வதி உள்ளிட்டவர்களையும் சந்தித்தார். அதன்பிறகு, ரஜினிகாந்த் ஜார்கண்ட்டுக்கு சென்று அந்த மாநிலத்தின் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து அவரிடம் சில விஷயங்களை பேசினார்.
பிறகு, இதனை அடுத்து ராஞ்சியில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கும் சென்றார். இந்த நிலையில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலுடன் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த, ஆன்மிக பயணத்தில், நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
மேலும், அதற்கு முன்னதாக அதாவது இன்று இரவு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்க்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, முன்னதாக ஜார்க்ண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்ற ரஜினிகாந்த் சின்னமாஸ்தாவில் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…