விருதுகளில் பெரியா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது . இதில், ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர அழைக்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக அழைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சூர்யா, நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற “சூரரைப்போற்று” திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஓடிடியில் வெளியான “ஜெய்பீம்” படமும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் போட்டியில் இடம்பெற்றது.
ஆனால், இந்த இரண்டு படமும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகவில்லை என்றாலும், விருது குழுவின் பாராட்டை பெற்றிருந்தது. இதனையடுத்து, தற்போது நடிகர் சூர்யா தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். ஏனென்றால், 95-வது ஆஸ்கர் அகாடமி விருது விழாவுக்காக ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினராக, அந்த அமைப்பு சார்பில் சூர்யாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்திய நடிகை கஜோலுக்கும் ஆஸ்கர் உறுப்பினராக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சுமார் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த சூர்யா மற்றும் கஜோலின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் ஆஸ்கர் அகடாமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…