நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கியது யுஏஇ!
சென்னை : ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கியது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கியுள்ளது. மலையாள தொழிலதிபர் MA யூசுப் அலி முன்னிலையில் DTC தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் கோல்டன் விசாவை ரஜினிகாந்திற்கு வழங்கினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து வீசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப்படுவதாகவும் விசாவை பெற்ற பிறகு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விசா நடைமுறைகளை கையாண்ட லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலிக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.
விசா பெற்ற கையோடு ரஜினிகாந்த், தனது பயணத்தின் போது BAPS இந்து மந்திர் மற்றும் அபுதாபியின் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி – நாட்டிலேயே மிகப்பெரிய மசூதியை பார்வையிட்டார். ரஜினிகாந்த் கோல்டன் விசா வாங்கியது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னர், கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா, துருவ் விக்ரம், மோகன்லால், மம்முட்டி, ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், துல்கர் சல்மான், சஞ்சய் தத், போனி கபூர், சுனில் ஷெட்டி ஆகியோருக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.