தளபதி ரசிகர்களுக்கு மற்றுமொறு ட்ரீட்! இன்று மாலை காத்திருக்கு வெறித்தனம்
தளபதி விஜய் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது.மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 19 ஆம்தேதி (அதாவது நாளை ) நடைபெறுகிறது.இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு உனக்காக என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகிறது.இந்த பாடலுக்கான போஸ்டரில் பிகில் படத்தில் முதல்முறையாக நயன்தாராவுடன் விஜய் இருக்கும்படி வெளியாகியுள்ளது.இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.