Annapoorani - Nayanthara [File Image]
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இன்று (நவம்பர் 18) தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
நயன்தாரா கடைசியாக ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் அன்னபூரணி திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். தற்பொழுது, நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாலை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருக்கிறார் நயன்தாரா, முதல் பாடலில் சிறு வயதில் இருக்கும் காட்சிகளை வித்து பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து பார்க்கையில், படம் முழுக்க வீட்டு குத்து விளக்காக நடித்திருப்பார் என தெரிகிறது.
இந்த படத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
என் உலகமே…மொத்த அழகும் நீ தான்! மனைவிக்கு அன்பு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!
மேலும், மண்ணாங்கட்டி, அன்னபூரணி ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிராராம்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…