உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
அந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஸ்ரீ காந்த தேவா இசையமைக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன் படத்தின் மோஷன் போஸ்டருடன் தலைப்பையும் படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்திற்கு “கலகத்தலைவன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மோஷன் போஸ்டர் மிகவும் அருமையாக இருப்பதால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…