உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும்… கடைசி நேரத்தில் ‘மாமன்னன்’ படத்துக்கு வந்த சிக்கல்.!!

udhayanidhi stalin mamannan

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் ராம சரவணன் சென்னை உயர்நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏஞ்சல் படம் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த படம் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018-ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், 80 % முடிந்துள்ளது. மீதம் 20 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ள நிலையில், மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஏஞ்சல் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் முழுவதும் முடிந்துவிடும் எனவும், இதுவரை ஏஞ்சல் படத்திற்கு ரூ. 13 கோடி செலவு செய்துள்ளோம் எனவும், ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்க வேண்டும் அல்லது இழப்பீடாக உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும். பணம் தரும் வரை மாமன்னன் படத்தை வெளியிட கூடாது என” கூறியுள்ளார். இதனால் திட்டமிட்டபடி மாமன்னன் வெளியாகுமா என கேள்வி எழும்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்