2 ஆண்டுகளுக்கு பின்பு ஒரே மேடையில் சந்தித்த இரு இசை தென்றல்கள்!
இசைஞானி இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் சிறந்த இசை தென்றல்கள். இவர்களது பாடல்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில், காப்புரிமை விவகாரத்தில் சில மன கசப்புகள் ஏற்பட்டது.
இதனால் இவர்கள் இருவரின் உறவுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விரிசல் ஏற்பட்டது. இவர்களது இந்த பிரிவு ரசிகர்கள் மத்தியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 2-ம் தேதி பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், இந்த விழாவின் ஒத்திகை நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். இவர்களது சந்திப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.