Rathnam [file image]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இதற்கு முன்னதாக ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் ஹிட் ஆகி இருந்த நிலையில், அடுத்ததாக ரத்னம் திரைப்படம் அந்த ஹிட் வரிசையில் இணையும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வெளியாகி இருக்கிறது.
இன்று வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த மக்கள் பலரும் படம் நன்றாக இருப்பதாகவும், படத்தின் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். ஒரு சிலர் படத்தின் முதல் பாதி சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இதனையடுத்து, படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.
படத்தை பார்த்த ஒருவர் ” ரத்னம் படத்தின் முதல் பாதி அருமையாக இருக்கிறது. இயக்குனர் ஹரி சண்டைக்காட்சிகளை அருமையாக படத்தில் வைத்து இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்துடன் பார்பதற்க்கு அருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மற்றோருவர்” ரத்னம் படம் தொடங்கி 30 நிமிடங்கள் மெதுவாக செல்கிறது. 30 நிமிடங்களுக்குப் பிறகு ஜெட் வேக திரைக்கதையை ஹரி கொடுத்து இருக்கிறார். படத்தில் விஷாலுக்கு இணையான கதாபாத்திரம் பிரியா பவானி சங்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கிள் ஷாட் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே அருமையாக இருக்கிறது. மார்க் ஆண்டனிக்கு பிறகு விஷாலுக்கு ரூ.100 கோடி வசூல் செய்யும் படமாக இந்த படம் அமையும். ஹரி மீண்டும் பழையபடி திரும்பியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் பின்னணி இசை படத்தின் முதுகெலும்பு கோடை விடுமுறைக்கான குடும்ப பொழுதுபோக்கு படம் இது தான்” எனவும் கூறியுள்ளார்.
மற்றோருவர் ” ரத்னம் படம் ரொம்ப மொக்கையாக இருக்கிறது பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
படத்தை பார்த்த மற்றோரு நெட்டிசன் ” ரத்னம் படம் நல்ல ஆக்ஷன் திரைப்படம். நகைச்சுவை, எமோஷனல் காட்சிகள் நன்றாக வேலை செய்கிறது. ரண்டாம் பாதியில் சில பின்னடைவுகள்.ஆக்ஷன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. கேமரா வேலை, பாடல்கள்,பிஜிஎம் நன்றாக இருக்கிறது. பூஜை படத்துக்கு பிறகு ஹரியின் நல்ல ஒரு படம்” என கூறியுள்ளார்.
விமர்சனங்களை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக படம் வசூல் ரீதியாக ஹிட் ஆகும் என தெரிகிறது. கடைசியாக ஹரி அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கி இருந்தார். யானை படத்தை விட இந்த ரத்னம் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் ஹரி இஸ் பேக் என பலரும் கூறி வருகிறார்கள்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…