பிரபல டிவி நடிகை கார் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை ஷோபா பிரபல கன்னட டிவி நடிகையாவார். இவர் மகளு ஜானகி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சில கன்னட படங்களிலும் கூட நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனசங்கரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
இந்நிலையில், சித்ரதுர்கா பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் லாரியில் மோதியுள்ளது. காரில் 8 பேர் இருந்துள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.