இதே மாதிரி ஷூட்டிங்கில் செய்தால் விளங்கிடும்! படவிழாவில் விஜய் சேதுபதி பேச்சு!
விஜய் சேதபதி நடிப்பில் அடுத்ததாக துக்ளக் தர்பார் எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தினை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் வேலை செய்தவர். விஜய் சேதுபதியின் நண்பர் ஆவார்.
இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது அதில் பேசிய விஜய் சேதுபதி, ‘ இயக்குனரை எனக்கும் 2010 முதல் தெரியும் என அறிமுகப்படுத்தினார். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி கூறும்போது மைக் திடீரென ஆப் ஆனது. உடனே இதேபோல ஷூட்டிங் அப்போ மைக் கொண்டுவாங்க ஷூட்டிங் விளங்கிடும் என செல்லமாக கடிந்துகொண்டார்.