பூட்டை உடைக்க முயற்சி…!காவல்துறையுடன் வாக்குவாதம் …! விஷால் அதிரடியாக கைது…!
காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அச்சங்க தலைவர் விஷால் மீது சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்த முறைகேடுகள் தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி, சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வந்துள்ளார்.விஷால் மீது குற்றச்சாட்டுகள் கூறி, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று பூட்டு போடப்பட்ட நிலையில், பூட்டை அகற்ற விஷால் முயற்சி செய்தார் .இதனால் அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாளை 7 படம் வெளியாகவுள்ளது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.