காதலை உறுதி செய்த த்ரிஷா! காதலன் யார்?
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.
இந்நிலையில், நடிகை திரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது, அவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, ஒருவர் உங்களது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்னவென்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த திரிஷா ‘சிங்கிள் பட் டேக்கன்’ என்று கூறியுள்ளார். திரிஷாவின் இந்த பதிலால் அவர் ஒருவரை காதலித்து வருவதாக பேசப்படுகிறது. மேலும், அவரது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, ‘do it when it’s want and not a need’ என்று பதிலளித்துள்ளார்.