கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது.
லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.
ஜாலியா பேசினேன் த்ரிஷா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! மன்சூர் அலிகான் பேட்டி
அதோடு, நேற்று வரை அந்த நடிகர் தயக்கம் காட்டி மன்னிப்பு கேட்க மறுத்திருந்தாலும், இன்று த்ரிஷா தன்னை மன்னித்து விட வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இந்நிலையில், த்ரிஷா தனது X தள பக்கத்தில், “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பதே தெய்வ பண்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர் அலிகான்!
இதற்கிடையில், நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முன்னதாக முன் ஜாமின் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை.
என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர்
நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தரப்பு வாதிட, மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.
இதனையடுத்து, த்ரிஷாவை அவதூறாக பேசிய புகாரில் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பிறப்பித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…