15 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் த்ரிஷா!
நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.