18 வருடம் கழித்து சிரஞ்சீவியுடன் இணைந்த திரிஷா.!

Chiranjeevi - Trisha

நடிகர் சிரஞ்சீவியின் தெலுங்கு படமான ‘விஸ்வம்பர’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை த்ரிஷா இன்று படப்பிடிப்பில் இணைந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது, லியோ படத்தை தொடர்ந்து, நடிகை திரிஷா அஜித்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திற்காக 18 வருடங்கள் கழித்து நடிகை திரிஷா மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

தயாரிப்பாளர்கள் வெளியிட்ட வீடியோவில் சிரஞ்சீவி மற்றும் அவரது இயக்குனர் வசிஷ்டா அவரை செட்டில் வரவேற்பதைக் காட்டுகிறது. இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வம்பர. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்க, மூத்த ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஹைதராபாத்தில் தொடங்கிய சமீபத்திய ஷெட்யூலில் திரிஷா இணைந்துள்ளார்.ஸ்டாலி படத்துக்கு பிறகு சிரஞ்சீவியுடன் திரிஷா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வம்பரா.

விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

அது மட்டும் இல்லாமல், திரிஷாவின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டாலும், அவரது கடைசி தெலுங்கு படம் 2014-ல் வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சிங்கம் திரைப்படம் தான். இந்த படத்தில் த்ரிஷா பிரபாஸ், ரவி தேஜா, அக்கினேனி நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்