உருவாகும் பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி பயோபிக்! த்ரிஷா, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை?
எம்எஸ் சுப்புலட்சுமி : பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா பிரபலங்களின் வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பழம் பெரும் பாடகியான எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்கை வரலாற்று படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய வாழ்கை வரலாற்று படத்தை பிரமாண்டமாக எடுக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராக இருக்கிறதாம்.
படத்தினை கன்னட படங்களை இயக்கும் பெரிய ஹிட் பட இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதால் படத்தில் எம்எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகைகளான த்ரிஷா, மற்றும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இவர்கள் நடித்தால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்படும். எனவே, படத்தை இயக்கும் இயக்குனர் இவர்கள் இருவரில் ஒரு ஹீரோயினை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
படத்தில் அவர்கள் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு த்ரிஷா, நயன்தாரா இருவரில் எந்த நடிகை சம்மதம் சம்பள விஷயம் மற்றும் கால்ஷீட் சரியாக கொடுக்கிறார்களோ அவர் இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. எனவே, விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கருநாடக இசைப் பாடகியான எம்எஸ் சுப்புலட்சுமி 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி 1956 இல் சங்கீத நாடக அகாடமி விருது, 1968 இல் சங்கீதா கலாநிதி விருது என பல விருதுகளை வாங்கி இருக்கிறார். இவர் 2004 – ஆம் ஆண்டு மண்ணைவிட்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.