அவதூறு பேச்சு… அருவருப்பாக இருக்கு! நடிகை த்ரிஷா ஆவேசம்!!

trisha angry

சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு பேட்டியில் த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய வீடியோ இன்று காலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரிஷா பற்றி அவர் பேசியதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக இயக்குனர் சேரன் “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதைப்போல, கஸ்துரி, ஒளிப்பதிவாளர் திரு ஆகியோரும் தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.

மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்த நடிகை அனுஷ்கா! தரமான கம்பேக் லோடிங்…

இந்நிலையில், நடிகை த்ரிஷா தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கோபத்துடன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ” கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது.

கண்டிப்பாக இந்த அவதூறு பேச்சுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத்துறையில் இருந்து வரும்” என மிகவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்