என்னது அசின் கூட சண்டையா? உண்மையை உடைத்த த்ரிஷா!

asin and trisha

சினிமா துறையில் நடிகர்களுக்கு போட்டி இருப்பது போல் நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜமான ஒன்று தான். அந்த வகையில், 90ஸ் காலகட்டத்தில் நடிகை அசின் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோருக்கும் இடையேவும் போட்டி நிலவி கொண்டு இருந்தது. ஒரு பக்கம் த்ரிஷா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டு இருக்க, மற்றோரு பக்கமும் விஜய்,  சூர்யா, விக்ரம்  ஆகியோருக்கு ஜோடியாக அசின் நடித்து கொண்டு இருந்தார்.

இருவரும் இப்படி அந்த சமயம் தொடர்ச்சியாக பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த காரணத்தால் இருவருக்கும் இடையே போட்டி சண்டையாக மாறியதாகவும் இருவரும் இதனால் பேசிக்கொள்ளவில்லை எனவும் அந்த சமயமே தகவல்கள் பெரிதாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து இருவருக்கும் உண்மையில் சண்டையா அல்லது அது வதந்தியா என த்ரிஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

வெற்றிநடை போடும் ஜோ! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

இது குறித்து பேசிய நடிகை த்ரிஷா ” அசினுடன் நான் சண்டை போட்டேன் என்ற தகவல் முழுக்க முழுக்க ஒரு வதந்தி. நான் இதுவரை எந்த ஹீரோயினுடனும் சண்டை போட்டதில்லை.எனவே, நான் அவருடன் சண்டைபோட்ட செய்து சற்று வித்தியாசமாக இருக்கிறது.ஒரு திரைப்பட கண்காட்சியில் நான் முதன்முதலில் அசினை சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த சமயம் அவர் நான் நடிக்கும் படங்களுக்கு வாழ்த்துக்களையும் சொன்னார்.

எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. ஆனால் ஊடகங்கள்தான் இப்படி ஒரு செய்தியை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.மற்றபடி எங்களுக்குள் எந்த சண்டையையும் இல்லை நாங்கள் நண்பர்கள் தான். ஒரு காலத்தில் நல்ல நெருக்கமாகவும் இருந்தோம் எனவே எங்களுக்குள் எப்படி பிரச்சனை வந்திருக்கும்? அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை இதனை பற்றி பரவுவது வதந்தி” என த்ரிஷா கூறியுள்ளார். எனவே, இதன் மூலம் த்ரிஷா மற்றும் அசின் ஆகியோருக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்