த்ரிஷா விவகாரம் – தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.!

Trisha

நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்துக் கேட்பதற்குக் கூசுகின்ற, ஆதாரமற்ற பொய்க்கதைகள் பரவி வரும் நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்பொழுது நடிகர் சங்கம் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “பொது வலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மேலும், அபாண்டமான அவதூறை பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே அரசியல் சுயலாபத்துக்காகப் பரப்புவது வேதனை அளிக்கிறது.

கூவத்தூர் விவகாரம்.. அவதூறு பேச்சு.! ஏ.வி.ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ்.!

திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் கவனத்தை கீழ்த்தரமானவராய் ஈர்த்துக் கருதியும் கொள்ளவும். கேட்போரை இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும், சட்ட ரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும்.

பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்