தந்திரமான நரி – கவுதம் மேனனை தாக்கி பேசிய முன்னணி தயாரிப்பாளர்
துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் கவுதம் மேனன் ட்விட்டரில் மோதிக்கொண்டது பெரிய சர்ச்சையானது. இருவரும் பின் தனியாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கவுதம் மேனனை தந்திரமான நரி என கூறி விமர்சித்துள்ளார்.
கவுதம் மேனன் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் பதிவிட்ட அவர், “அவர் மீது முன்பே போலீசில் புகார் அளித்தோம், ஆனால் தற்போதும் அவர் வலையில் பலர் சிக்குகிறார்கள். கார்த்திக் நரேன் தைரியமாக இந்த பிரச்சனையை பற்றி வெளியில் பேசினார், ஆனால் பலர் இது போன்ற பிரச்சனைகளை பெரிதாக்காமல் விட்டுவிடுகின்றனர்” என கூறியுள்ளார்.