அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார்.இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த வகையில் நாளை இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதனால் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இவரது கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் தற்போது #plantforkalam என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…