பிறந்தநாளில் அலறி துடித்த விஜய் சேதுபதி! வீடியோ வெளியிட்டு வாழ்த்திய படக்குழு!
விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ட்ரெயின் படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவர் நடிக்கும் படங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து செய்து வந்து கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் இருந்து தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவாக சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கன்னக்குழிக்காரா எனும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.
இந்த வீடியோ பாடலில் ஸ்ருதிஹாசன் பாடல் ஒலிக்க, விஜய் சேதுபதி ட்ரெயினுள் நடந்து செல்வது போலவும், அடுத்து ஷூட்டிங்கில் ஒரு பட காட்சிக்காக விஜய் சேதுபதி அலறி துடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. கன்னக்குழிக்காரா பாடல் மிஷ்கின் இசையில் ஒரு மெலடி பாடலாக உருவாகியுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெயின் படத்தை கலைப்புலி எஸ் . தாணு தயாரிக்கிறார். விஜய் சேதுபதி உடன் ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கலையரசன் என பலர் நடிக்கின்றனர்.