தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள விசுவாசம் திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து, பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில், வழக்கறிஞராக நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என, இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த, நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.