அதிகப்படியான மருந்தை எடுத்துக்கொண்டதால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.!
பிரபல ஹாலிவுட் நடிகர் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள வெதுவெதுப்பான குளியல் அறை தொட்டியில் (ஜக்குஸி) இறந்து கிடந்தார். ஆனால், அவரது அகால மரணம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அதன்படி, நேற்று வெளியானஅதில், “கெட்டமைனின் (ketamine) என்ற மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக” பிரேத பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட மருத்துவப் பரிசோதனைத் துறை பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “மத்தேயு பெர்ரியின் மரணத்திற்கான காரணம் கெட்டமைனின் அதிகப்படியான காரணத்தால் குளியல் அறை தொட்டியில் மூழ்கி உயிரிழக்க காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை 2 தாமதமாக காரணம் என்ன? வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!
மேலும், அவரது உடலில் மதுபானம் எதுவும் இல்லை எனவும், கோகோயின், ஹெராயின் அல்லது ஃபெண்டானில் போன்ற பிற போதைப்பொருட்களின் தடயங்கள் எதுவும் இல்லை என்று கண்டறியபட்டது. மன உளைச்சல், மனச்சோர்வு போன்ற மனம் சார்ந்த கோளாறுகளை சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இந்த கெட்டமைன் மருந்து பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.