பிரபல நடிகருக்கு நேர்ந்த சோகம் -மருத்துவமனையில் அனுமதி !
கன்னட சினிமாவில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விஷயம் அரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். அதாவது கார்த்திக் விக்ரம்என்ற நடிகர் Nagavalli Vs Apthamithraru என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
இந்த நேரத்தில் கடந்த செவ்வாய் கிழமை இரவு 11.30 மணியளவில் மர்ம நபர்களால் நடிகர் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். அதோடு அவர் காரில் இருந்த பணம் மற்றும் செல்போனை அந்த 8 மர்ம நபர்கள் தூக்கிவிட்டனராம்.
கார்த்திக் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காது மற்றும் தலையில் அவருக்கு அடிபட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். ஆனால் அவர் பட புரொமோஷனுக்காக இப்படி ஒரு போலி திருட்டு கதையை உருவாக்கியிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.