தடகள வீராங்கனையாக களமிறங்கும் டாப்ஸி! இது ஒரு உண்மை கதை!
நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆடுகளம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் நாதா பெரியசாமி என்பவர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி கதையாக எழுதி உள்ளார். இந்த கதையானது பாலிவுட்டில் ராஷ்மி ராக்கெட் என்ற பெயரில் படமாக உள்ளது. இப்படத்தில், நடிகை டாப்ஸி தடகள வீராங்கனையாக நடிக்கிறார்.