கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் படம் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
இந்த நிலையில், கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அது என்னவென்றால், கவின் நடிக்கும் அடுத்த படத்தை நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இயக்கவுள்ளார் என்றும், அப்படத்தை ரெமோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதைப்போல அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் கூடுதல் தகவலாக அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, அப்படத்தில் கவினுக்கு ஜோடியாக இளம் நடிகையாக வளம் வரும் பிரியங்கா மோகன் தான் நடிக்கவுள்ளாராம்.
ஏற்கனவே கவினும் பிரியங்கா மோகனும் நெருங்கிய நண்பர்கள். எனவே, கவினுக்கு ஜோடியாக அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரியங்கா மோகன் தற்போது தனுஷிற்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…