Categories: சினிமா

லியோ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!

Published by
கெளதம்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்த நிலையில், விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் ஏன் திரையரங்குகளில் கண்டு ரசிக்கப்பட வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்கள் பற்றி பார்க்கலாம்.

விஜய்யின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம்

இந்த படத்தில் இதுவரை இல்லாத நடிப்பை விஜய் வெளிப்படுத்திருப்பார் என்று படத்தின் ட்ரைலரை எடுத்துக்காட்டியது. அந்த வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள  லியோ தாஸ் மற்றும் பார்த்திபன் என விஜய் நடித்திருக்கும் இரட்டை வேடங்கள் ரசிகர்களை வியக்க வைக்க உள்ளது. இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே ஒரு தனித்துவமான வேறுபாட்டை லோகேஷ் ஏற்படுத்தி வைத்திருப்பார் என தெரிகிறது.

விஜய்யுடன் மீண்டும் த்ரிஷா

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் மற்றும் அழகான ஜோடியான விஜய் – த்ரிஷா காம்போ இப்பொது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் ஒன்றாக காண உள்ளனர். படத்தில், கணவன்-மனைவியாக நடிக்கும் இவர்கள் இருவரையும் லோகேஷ் மெருகேற்றி வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!

பான்-இந்திய நட்சத்திர பட்டாளம்

பான்-இந்திய திரைப்படமாக உருவாக்கப்ட்டுள்ள ‘லியோ’ படத்தில், பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கவுதம் மேனன், நடிகை பிரியா ஆனந்த், லோகேஷின் பேவரைட் ஹீரோ மன்சூர் அலி கான், மலையாள சினிமாவின் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் போன்ற நட்சத்திரங்கள் உள்ளதால் பல ஆச்சரியமான தருணங்கள் நிறைந்த காட்சிகள் இடம்பெறும் என தெரிகிறது.

100% லோகேஷ் சம்பவம்

விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கனகராஜ் தனது lcu-க்குள்  லியோவை கொண்டுவந்து மிரட்டி இருப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்று அவரே பல இடங்களில் சொல்லிவிட்டார்.

முதல் நாள் வசூலில் ரஜினி-அஜித்தை ஓரங்கட்டுவாரா தளபதி விஜய்? லியோ சம்பவம் லோடிங்…

அனிருத் இசை

அனிருத் நான்காவது முறையாக விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் 3 பாடல்கள் மட்டும் வெளியான நிலையில், அனிருத்தின் பேக்ரவுண்ட் ஸ்கொர் பயங்கரமாக இருக்கும் என தெரிகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெரும் தீம் டிராக்குகள் திரையரங்குகளில் நல்ல அனுபவத்தை கொடுக்கும். இதனால், திரையரங்குகளில் லியோவை பார்த்தால் நல்லா இருக்குமென தெரிகிறது.

Published by
கெளதம்

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

2 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

3 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

4 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

5 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

6 hours ago