இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
unknown nodeSS Rajamouli wins Best Director award for ‘RRR’ [Image Source: Twitter ]
இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை குவித்து வருகிறது.
இதையும் படியுங்களேன்-இளசுகள் மனதை கொள்ளயடித்த தேவதைகள்… குந்தவை முதல் நிகிதா வரை… 2022 ட்ரெண்டிங் லிஸ்ட்.!
unknown nodeIMDb Top 10 Most Popular Indian Movies [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து, இந்த ஐஎம்டிபி (IMDb) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் 3 தமிழ் திரைப்படங்களும் இடம் பிடித்துள்ளது. அதன்படி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 3-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படமும், 9-வது இடத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் உள்ளது.
IMDb முதல் 10 மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள்:
1.ஆர்ஆர்ஆர்
2. காஷ்மீர் பைல்ஸ்
3. கேஜிஎப் 2
4. விக்ரம்
5. காந்தாரா
6. ராக்கெட்ரி
7. மேஜர்
8. சீதாராமம்
9.பொன்னியின் செல்வன் -1
10. சார்லி
unknown node