சினிமா

ரொம்ப பாவம்! மன வருத்தத்தில் ‘குட்டி ஜானு’… காரணம் என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 96 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இவர் இந்த 96  படத்தில் சிறிய வயது த்ரிஷா (குட்டி ஜானு) ஆக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தான் கௌரி கிஷன் பெயரை வெளியே தெரிய வைத்தது என்றே கூறலாம். இந்த திரைப்படத்திற்கு பிறகு கௌரி கிஷன் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும், ஒரு சில படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக கௌரி கிஷன் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட அவரை பற்றி ஒரு செய்தி வந்தால் குட்டி ஜானு என்று தான் வருகிறது. இந்த நிலையில், இப்படி குட்டி ஜானு என்று மக்கள் அழைப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை மிஞ்சும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்க கூடியவர் என்பதை மக்கள் உணர வேண்டும் என கௌரி கிஷன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ” மக்கள் என்னை ஜானு என்று அழைக்கும் போது நான் எப்போதும் மிகவும் அன்பாவும், மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால், அதே சமயம் எனக்கு வருத்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால், அந்த குட்டி ஜானு படத்திற்கு பிறகு பேச தகுதிகொண்ட எந்த படத்திலும் நான் நடிக்கவில்லையா? நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும், அதயெல்லாம் பற்றி பேசாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நான் ஜானுவை விட பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர் என்பதனை மக்கள் உணர வேண்டும். ஜானு என்பதனை மாற்றவேண்டும். நான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று மக்கள் நினைக்க முடியாத கதாபாத்திரங்களில் நடிக்க நான் முயற்சி செய்து வருகிறேன். அப்படி தான் கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.

நான் ஒரு நடிகை என்பதால் குடும்ப கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். கதைக்கு எப்படியெல்லாம் நடிக்கலாமோ அப்டியே நடிப்பேன் ஒரு நடிகையாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நடிக்கவேண்டும்” எனவும் கௌரி கிஷன் தெரிவித்துள்ளார். கௌரி கிஷன் கடைசியாக ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக அடியே திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago