200-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதனின் பிறந்த நாள் இன்று.!
மறைந்த வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான, குன்னக்குடி வைத்தியநாதனின் 74-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருதை பெற்றுள்ளார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் இவரும் முக்கியமான ஒருவர்.
இவர் சினிமாவில் கடந்த 1969-ஆம் ஆண்டு வெளியான ‘வா ராஜா வா’ என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ‘ராஜ ராஜ சோழன்’, ‘திருமலை தெய்வம்’, ‘காரைக்கால் அம்மையார்’ உள்ளிட்ட 22 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக காலமானார். இவர் மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் இன்றுவரை காலத்தால் அழிக்கமுடியதாக ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், இன்று இவருடைய 74-வது பிறந்த நாள்.
மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன் 2005-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ,இசை சக்கரவர்த்தி விருது, இசை பேரறிஞர் விருது, சங்கீத ரத்னா, சங்கீத சாகரம், வில்லிசை வேந்தன், வயலின் சாம்ராட், யெழிசை சக்ரவர்த்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தில் இடம்பெற்றிருந்த “ஐயங்காரு வீடு” பாடலிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.