ஒன்லி ஒன் சூப்பர் ஒன்! இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்!

HBD rajinikanth

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்றது போல ரஜினிகாந்த் பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாது. சினிமா துறையில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார்.

நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர கூடிய கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த காரணமே ரஜினியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.  அதுமட்டுமின்றி தனக்கென்று ஒரு ஸ்டைல் பாணியை உருவாக்கி கொண்டு பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சூப்பர் ஸ்டார் என்று இவருக்கு பட்டம் கிடைத்த பிறகு தான் பாலிவுட்டிலும் கூட அமிதாப்பச்சன் போன்ற நடிகர்கள் எல்லாம் தங்களுடைய படங்களில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டங்களை போடா தொடங்கினார்கள். அந்த அளவிற்கு இந்திய சினிமாவில் ரஜினி தன்னுடைய படங்களின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் என்றாலே வசூலில் ஒரு கலக்கு கலக்கி  இதுவரை 169 படங்கள் ஹீரோவாக நடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய படங்களின் வசூலை வைத்தே பல சாதனைகளை படைத்தது இருக்கிறார். குறிப்பாக இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களின் படங்கள் வெளியாகி ஹிட் ஆகி இருக்கிறது. அதில் அதிகமாக வசூல் செய்த ஒரே திரைப்படம் என்றால் அவருடைய நடிப்பில் வெளியான 2.0 படம் தான்.

2.0 திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட படம் உலகம் முழுவதும் 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஒரு நடிகர் இத்தனை ஆண்டு சினிமாவில் இருந்து வசூலில் கலக்கி வருகிறார் என்றால் அது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் என்றே சொல்லவேண்டும்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படமும் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் இன்று டிசம்பர் 12-ஆம் தேதி தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 171-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack