Categories: சினிமா

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று.. விஜயாவின் சுளுக்குக்கு மீனா தான் காரணமா?

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை -சிறகடிக்க  ஆசை தொடரின் இன்றைய[ஜூன் 20] பரபரப்பான காட்சிகளை இங்கே காணலாம்.

விஜயா மீனாவை திட்டுகிறார் ;

விஜயாவுக்கு சுளுக்கு பிடித்து வலியுடன் இருக்கிறார் , மீனாவை கூப்பிட்டு என்னை ஒரேயடியாக உட்கார வைக்க தான் டான்ஸ் சொல்லித்தர சொன்னியா  என்று திட்டுறாங்க .. இப்போது மீனா கிளாசுக்கு யாரும் வரலைன்னு வருத்தப்பட்டிங்க  அதனால் தான் நாங்க  வந்தோம் .

சொல்லிட்டு கோவமா  சமையலறைக்கு போறாங்க . இப்போது ரோகினி  வாங்க ஆன்டி ரூமுக்கு  போகலாம்னு கூப்டு போறாங்க  . முத்து மீனாவிடம் சென்று நீ கொஞ்சம் குறைச்சு ஆடிருக்கலாம்   .ரெண்டு பேரும்  போட்டிபோட்டு ஆடுனீங்க  .. இதைக் கேட்ட மீனா இதற்கு நான்தான் காரணம்னு சொல்லுறிங்களா அப்புடின்னு கோமாயிடுறாங்க.

ஸ்ருதியின் அலப்பறைகள் ;

மீனா விஜயா  ரூமுக்கு போறாங்க இப்போ அங்க எல்லாருமே வர்ராங்க .அண்ணாமலை சொல்லுறாரு சீக்கிரம் சரியாயிடும் விஜயா .. இந்த படியில் உன் தலையை வச்சுபடுன்னு   சொல்லுறாரு .இப்போ ஸ்ருதி அங்கே வர்ராங்க .. என்ன குரங்கு வித்தையா காட்டுறேன்  என்று  விஜயா கேக்குறாங்க

ஸ்ருதி அந்த படியை எடுத்து இதுதான் படியா என ஆச்சரியமாக கேட்கிறார். இப்போது அந்த படியில் தலை வைத்து படுக்க வைக்கிறார்கள். ஸ்ருதி அதை வாய் திறந்து கொண்டு ஆச்சரியமாக பார்க்கிறார். இப்போ மனோஜ் ரோகிணியே திட்றாரு நீ ஏன்  அம்மாவுக்கு இந்த ஐடியாவை கொடுத்த அப்படின்னு .

அதுக்கு ரோகினி சொல்றாங்க .. என்னோட பார்லர்ல வந்து உட்கார்ந்துகிறேன்  சொல்றாங்க.. இல்லாட்டி உன்னோட கடைக்கு வரேன்னு சொல்றாங்க ஏதாவது பிரச்சனையா ஆயிரும்னு  சொல்லிட்டு தான் இந்த ஐடியாவை கொடுத்தேன் அப்படின்னு சொல்லிட்டு இதுக்கு முத்துவும் மீனாவும்  தான் காரணம் அப்படின்னு சொல்றாங்க.

மீனாவிடம் மாட்டும் கறிக்கடை மணி ;

இப்போ மீனா பாய் எடுத்துட்டு விஜயா ரூமுக்கு போறாங்க.. உடனே விஜயா மீனவா  பார்த்ததுமே திட்றாங்க போய் எனக்கு சுடு தண்ணி காய வைத்து கொண்டு வா .அப்படியே ரோகிணியே வர சொல்லிட்டு போ அப்படின்னு சொல்றாங்க. ரோகினி உள்ள வர்றாங்க ..அந்த மீனா கூட எல்லாம் என்னால தூங்க முடியாது. ரோகினி நீ வந்து இங்க படுத்துக்கோன்னு சொல்லிடறாங்க.

இத மனோஜ் கேட்டுட்டு நீங்க கொரட்ட ரொம்ப அதிகமா விடுவீங்க அதனால ரோகினியோட தூக்கம் கெட்டுவிடும் னு சொல்றாரு. இல்லடா எனக்கு வலி அதிகமா இருந்துச்சுன்னா ரோகினி எனக்கு உதவி பண்ணுவா அவ இன்னைக்கு இங்கேயே தூங்கட்டும் அப்படின்னு விஜயா  சொல்றாங்க . மனோஜ் போய் தூங்குறாரு.

காலையில மீனா பூ டெலிவரிக்கு போறாங்க அங்க தான் கறிக்கடை மணிய பாக்கறாங்க.. அவரும் இவங்கள பார்த்துறாங்க பார்த்துட்டு தப்பிச்சு போக முயற்சி பண்றாங்க மீனா விடாம துரத்துறாங்க. இப்போ மனோஜ் ரோகினியும் கடையில பேசிட்டு இருக்காங்க .அப்போ அங்கே வேலை பார்க்கிற ரெண்டு பேரு டிரஸ் அயன் பண்ணாம போட்டுட்டு வராங்க..

இதை பார்த்து மனோஜ் திட்றாரு. கூடவே அவங்க கிட்ட அயன்பாக்ஸ கொடுத்து இனிமேல் அயன் பண்ணிட்டு தான் வரணும் அப்படின்னு சொல்றாரு இதுக்கு நான் சம்பளத்துல பிடிச்சுக்குவேன்னு  சொல்றாரு .இத பார்த்த ரோகினி பாராட்டுறாங்க. அந்த நேரத்துல வித்யா  வந்துடறாங்க.. கைல சாமி போட்டோ ஓட வராங்க.

முத்துவும் செல்வமும் மனோஜ் கடைக்கு சொல்கிறார்கள் ;

இப்போ ரோகிணி மீனாவுக்கு கால் பண்ணி எங்க கடைக்கு பூ கொண்டு வாங்க  அப்படின்னு சொல்றாங்க .அந்த டைம்ல கறி கட மணி தப்பிச்சிடறாரு .ஆனா அவரு மனோஜோட கடைக்கு தான் வருகிறார் .இப்போ ரோகிணியும் வித்யா  கறிக்கடை மணி மூணு பேரும் பேசிட்டு இருக்காங்க. அந்த டைம்ல செல்வம் பிரிட்ஜ் வாங்கணும்னு முத்து கிட்ட சொல்றாரு.

முத்து மனோஜ் கடைக்கு கூட்டிட்டு வராரு .இத பார்த்ததும் ரோகினி ஷாக் ஆயிட்டு அவர ஒரு பிரிட்ஜில ஒளிச்சு வச்சுடுறாங்க.. அந்த டைம்ல மீனாவும் அங்க வந்துறாங்க.ஆனா கரெக்டா செல்வம்  அந்த பிரிட்ஜ் தான் எனக்கு புடிச்சிருக்குன்னு ஓபன் பண்ண போறாரு .அத வித்யா  தடுத்து நிறுத்துறாங்க. இதோடு  இன்னைக்கான எபிசோட் முடிந்தது.

Published by
K Palaniammal

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

4 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

9 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

9 hours ago