இசை ஜாம்பவான் என அழைக்கப்படும் அல்லா இரக்கா இரகுமான் எனப்படும் ஏ.ஆர். ரகுமான் அவதரித்த தினம் இன்று.
பிறப்பு:
இவர் ஜனவரி மாதம் 6ம் நாள் , 1966 ம் ஆண்டு பிறந்தார். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும்.
இசை பயணம்:
புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான இவர், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்க்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் இவர், இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
இவரின் சாதனைகள்:
இவர் இசைதுறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் இவர் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார் ஆவர். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. இவரின் இசை திறனை பாராட்டி இவரை ஆசியாவின் மொசார்ட் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…