வரலாற்றில் இன்று(06.01.2020)… இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம்..

Default Image

இசை ஜாம்பவான் என அழைக்கப்படும் அல்லா இரக்கா இரகுமான் எனப்படும் ஏ.ஆர். ரகுமான் அவதரித்த தினம் இன்று.

பிறப்பு:

இவர் ஜனவரி மாதம்  6ம் நாள் , 1966 ம் ஆண்டு பிறந்தார். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது  இவரது இயற்பெயர் ஆகும்.

இசை பயணம்: 

புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான இவர், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற  திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்க்கு  இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் இவர்,  இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

இவரின் சாதனைகள்:

இவர் இசைதுறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் இவர்  ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கில ஹாலிவுட்  திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார் ஆவர். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. இவரின் இசை திறனை பாராட்டி இவரை  ஆசியாவின் மொசார்ட் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்