சத்தியமா சொல்றேன்…சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்…பார்த்திபன் எமோஷனல்!!
பார்த்திபன் : நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து ‘TEENZ’ (டீன்ஸ்) என்கிற படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இருந்த காரணத்தால் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வழக்கமாகவே பார்த்திபன் இயக்கும் படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். அதைப்போலவே, இந்த டீன்ஸ் படமும் இருப்பதால் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, படத்திற்கு வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எமோஷனலாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Friends
சத்தியமா சொல்றேன்
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா
நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான்… pic.twitter.com/XFUmjISkSF— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 14, 2024