காதல் படம் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது கடந்த 1997-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “டைட்டானிக்” படம் தான். இந்த படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு எமோஷனலாக இருக்கும். படத்தை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
இந்த படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த காதல் திரைப்படம் பல இளைஞர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைடைந்து. மேலும் ஆஸ்கர் விருதுக்கு, 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 11 விருதுகளை வாங்கி திரைஉலகையே மிரள வைத்தது என்றே கூறலாம். இதுவரை எந்த படமுமும் இதை போல ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதே இல்லை.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையில், டைட்டானிக் படக்குழு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளனர். அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி (10.02.2023) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை 4k வெர்ஷனிலும் 3டியிலும் வெளியாக உள்ளதாகவும் படத்தின் புதிய ட்ரைலரையும்வெயிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…